இலங்கை நிருவாக சேவை போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

0

இலங்கை நிருவாக சேவையின் தரம் 3இல் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்புச் செய்ய பொது நிருவாக இடர் முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

திறந்த போட்டிப்பரீட்சை மூலம் 203பேரும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலம் 54 பேரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பங்கள் இன்றைய தினம் (19) அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இப் பரீட்சை தொடர்பில் திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்போர் 5 வினாப்பத்திரங்களைக் கொண்ட எழுத்துப் பரீட்சைக்கும் பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சைக்கும் தோற்றவேண்டும் என்பதுடன் திறந்த போட்டிப்பரீட்சைக்கான வயதெல்லை 22-30 ஆகும்.

மட்டுப்படுத்தப்பட்டபோட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போர் 4 வினாப்பத்திரங்களைக் கொண்ட எழுத்துப் பரீட்சைக்கும் பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சைக்கும் தோற்றவேண்டும் என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டபோட்டிப் பரீட்சைக்கான வயதெல்லை 53க்கு உள்பட்டதாக இருத்தல் வேண்டும்.
இவ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 19.8.2019 ஆகும்.