பாணின் விலை அதிகரிப்புத் தீர்மானம் மீளப்பெறப்பட்டது

0

450 கிராம் பாணின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் 450 கிராம் எடையுள்ள பாணின் விலை முன்னர் இருந்தவாறே ரூபா 65ஆக இருக்கும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கோதுமை மாவின் விலையை 8 ரூபாவால் அதிகரிப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை பிறிமா நிறுவனம் அறிவித்தது. அதனால் பாணின் விலையை நேற்று வியாழக்கிழமை முதல் 5 ரூபாவால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்தது.

எனினும் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு உரிய அனுமதியை பிறிமா நிறுவனம் பெற்றுக்கொள்ளவில்லை என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்தது. அதனால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையில் 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.