யாழ். மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா – 10,000 மீற்றர் ஓட்டத்தில் காரைநகர் இளைஞர் முதலிடம்

0

யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் காரைநகர் இளைஞர் கழக வீரர் குமாரசாமி வசந்தரூபன் முதலாமிடத்தைப் பிடித்தார்.

2019ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாணம் மாவட்டஇளைஞர் விளையாட்டு விழா இன்று துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

முதல் நாளான இன்றைய தினம் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஒட்டப்பந்தயம் இடம்பெற்றது.
இதில் காரைநகர் இளைஞர் கழக சம்மேளன வீரர் வசந்தரூபன் முதலாம் இடத்தை தட்டிச்சென்று தேசிய மட்டத்திற்கு தெரிவானார்.