ரயிலுடன் மோதி இருவர் பரிதாபச் சாவு; ஒருவர் வல்வையைச் சேர்ந்தவர் – கிளிநொச்சியில் சம்பவம் (2ஆம் இணைப்பு)

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு இருவர் உயிரிழந்தனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த தபால் சேவை தொடருந்துடனேயே இன்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறை பொலிகண்டி கிழக்கு, புதுவளவைச் சேர்ந்தவர் என்று அவரது தேசிய அடையாள அட்டையை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் அவருடைய வயதை ஒத்த மற்றவர் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொடருந்து பயணிக்கும் போது, இளைஞர்கள் இருவரும் ரயில் பாதையில் கதைத்துக் கொண்டிருந்தார்கள் என்று ரயில்வே ஊழியர் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!