இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

மானிப்பாயில் ஆவா குழு உறுப்பினரே சுட்டுக்கொலை – நால்வரைத் தேடி நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

0

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்தல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மானிப்பாய் – இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர் தப்பி ஓடிவிட்டார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற வரும் நபரை அனுமதிக்குமாறு வைத்தியசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இந்தச் சம்பவம் இன்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.
“மானிப்பாய் பொலிஸ் பிரிவில் மானிப்பாய் – இணுவில் வீதியில் ஆவா குழு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் இணைந்து ஆவா குழுவைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.

சிறப்பு அணி மானிப்பாய் – இணுவில் வீதியில் களமிறக்கப்பட்டிருந்தது. ஆவா குழுவைச் சேர்ந்தோர் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை வழிமறித்துக் கைது செய்ய பொலிஸார் முற்பட்டனர். எனினும் தப்பிக்க முற்பட்ட போது ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கஜேந்திர வாள் ஒன்று சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நால்வர் தப்பித்துள்ளனர். அவர்களைத் தேடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவத்தையடுத்து மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here