கரவெட்டியில் ஞாயிறன்று மாட்டுவண்டிச் சவாரி

0

கரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி சவாரிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி,ப 1.30 மணி முதல் கரவெட்டி சோனப்பு சவாரித்திடலில் இடம்பெறவுள்ளது.

“ஒவ்வொரு குழுக்களிலும் வெற்றி பெறும் முதல் 4 இடங்களை பெறும் போட்டியாளருக்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு குழுவிலும் முதலாம் இடத்தை பெறும் போட்டியாளருக்கும் துவிச்சக்கரவண்டி பரிசாக வழங்கப்படும்.

அத்தோடு ஏ,பி,சி மற்றும் டி குழுவிலும் 2ம் 3ம் 4ம் இடங்களை பெறும் போட்டியாளருக்கு பெறுமதி மிகு பரிசுகளும் வழங்கி வைக்கப்படும்” என்று போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.