பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலான விமான நிலையத்தை தரமுயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

0

பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலான ஆகிய மூன்று விமான ஓடுதளங்களிலும் வணிக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவற்றை பிராந்திய விமான நிலையங்களாகத் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையிலே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த சில வருடங்களில் உள்ளக விமான சேவையை மேம்படுத்துவதற்காக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபவிருத்தி செய்யவும் இரத்மலானை விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக வசதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்பந்தப்பட்ட தரத்திற்கு அமைய வெளிநாட்டு விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளும் பிராந்திய வணிக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த விமான நிலையங்களில் உறுதிசெய்யுமாறு இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபைக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் இந்த விமான நிலையங்களில் சட்ட ரீதியில் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய எல்லை நிர்வாக விதிமுறைகளை தயாரிப்பதற்காக சிவில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.