ராவணா 1 செய்மதி தனது முதலாவது படத்தை அனுப்பியது

இலங்கையின் முதலாவது செய்மதி ராவணா-1 விண்வெளியிலிருந்து தனது முதலாவது படத்தை அனுப்பிவைத்துள்ளது.

இந்தச் செய்மதி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்தப் படத்தை அனுப்பிவைத்துள்ளது.

ஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, இலங்கை ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன, துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ தொழில்நுட்ப நிறுவகத்தில் இந்த ராவணா-1 செய்மதி, வடிவமைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் அயல் நாடுகளைப் படம் பிடிக்கக் கூடிய வசதிகள் இந்த செய்மதியில் உள்ளன. இது 11.3 செ.மீ x 10 செ.மீ. x 10 செ.மீ அளவுடையதும், 1.05 கிலோ எடையுள்ளதும் ஆகும்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்தச் செய்மதி செயற்படக் கூடியது.

இந்தச் செய்மதி கிழக்கு வேர்ஜினியா கடற்கரையில் உள்ள நாசாவின் வலூப் ஏவுதளத்தில் இருந்து அன்ராரஸ் ஏவுகணை மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அதிகாலை 2.16 ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!