இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்

0
20

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா கிரிகெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்னே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்து அணியுடனான தொடரின் போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹதுருசிங்கவை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவுறுத்தியிருந்தார்.

எனினும் அரசியல் காரணங்களுக்கான அமைச்சரின் அறிவுறுத்தல் புறந்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.