தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏறுமுகம்

0
19

நாட்டில் 24 கரட் தூய தங்கத்தின் விலை நாளுக்கு நாள் 400 ரூபாவால் அதிகரித்து வருவதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இறக்கம் என்பன இலங்கையில் கடந்த ஒரு வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்து செல்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டில் இன்று (ஓகஸ்ட் 5) திங்கட்கிழமை 24 கரட் பிஸ்கட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 68 ஆயிரத்து 400 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 62 ஆயிரத்து 700 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

24 கரட் பிஸ்கட் தங்கத்தின் விலை கடந்த ஜூலை மாத இறுதியில் 67 ஆயிரத்து 400 ரூபாவரை ஏற்றமடைவதும் குறைவடைதுமாகக் காணப்பட்ட நிலையில் ஓகஸ்ட் மாதம் 5 நாள்களில் அதன் விலை ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.