தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க கூட்டமைப்பினர் இனியாவது முன்வருவார்களா? – விக்னேஸ்வரன் கேள்வி

0

மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் அடிப்படைஉரிமைகளைப் பெற்றெடுக்க முன்வருவார்களா?

இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் பதவி நீக்கியமை தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில் அவர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டகேள்வி: டெனிஸ்வரன் வழக்குஉங்களுக்குஎதிராகஇன்றுதீர்மானிக்கப்பட்டுள்ளதாகஅறிகின்றோம். அதுபற்றி?

நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

முன்னையஅமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்ற கேள்வியை நீதியரசர்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்துப் பற்றி நீதியரசர்கள் ஆராய்ந்திருக்கத் தேவையில்லை.

ஆளுநர் தன் கடமையில் தவறிவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எனினும், ஆளுநருக்கே சகல உரித்துக்களும் உண்டு என்று நீதிமன்றம் கூறுவதில் இருந்து 13ஆவது திருத்தச்சட்டத்தின் குறைபாட்டை மக்கள் அறியக் கூடியதாக இருக்கின்றது.

இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டிய அரசியல் யாப்பையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ‘புதியயாப்பு’‘புதியயாப்பு’ என்று துள்ளுகின்றது. ஆளுநர் அரச முகவர் முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்.

மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தமிழர்களின் அடிப்படைஉரிமைகளைப் பெற்றெடுக்க முன்வருவார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here