இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றம் – 24 கரட் 70,000 ரூபாவை எட்டியது

0
18

நாட்டில் தங்கத்தின் விலை வரலாற்று காணதாக ஏற்றம் கண்டுள்ளது. 24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று 70 ஆயிரம் ரூபாவை இன்று எட்டியுள்ளது என்று தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

வரலாற்றில் தங்கத்தின் விலை 70 ஆயிரம் ரூபாவை எட்டியது இது முதல் தடவை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இறக்கம் என்பன இலங்கையில் கடந்த ஒரு வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்து செல்கிறது சென்றது.

இந்த நிலையில் நேற்று (ஓகஸ்ட் 6) செவ்வாய்க்கிழமை 69 ஆயிரம் ரூபாவாக இருந்த தூய தங்கத்தின் விலை இன்று ஆயிரம் ரூபாவால் அதிகரித்தது.

நாட்டில் இன்று (ஓகஸ்ட் 7) புதன்கிழமை 24 கரட் பிஸ்கட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 70 ஆயிரம் ரூபாவாவும் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 64 ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

24 கரட் பிஸ்கட் தங்கத்தின் விலை கடந்த ஜூலை மாத இறுதியில் 67 ஆயிரத்து 400 ரூபாவரை ஏற்றமடைவதும் குறைவடைதுமாகக் காணப்பட்ட நிலையில் ஓகஸ்ட் மாதம் 7 நாள்களில் அதன் விலை 2 ஆயிரத்து 600 ரூபாவால் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையில் அதன் விலை வரும் நாள்களில் மேலும் அதிகரித்துச் செல்லும் என்று தங்கம் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.