இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமனம் – டெஸ்ட் குழாமும் அறிவிப்பு

0
17

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணியுடனான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ருமேஸ் ரத்நாயக்க செயற்படவுள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் 22 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தினேஷ் சந்திமல், அகில தனஞ்சய, டில்ருவான் பெரேரா ஆகியோர் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இதில் முதலாது டெஸ்ட் வரும் 14ஆம் திகதி காலியிலும் இரண்டாவது டெஸ்ட் ஓகஸ்ட் 22ஆம் திகதி கொழும்பிலும் ஆரம்பமாகிறது.

இந்தத் தொடரில் விளையாடும் 22 பேர் கொண்ட இலங்கை குழாம் வருமாறு:

திமுத் கருணாரத்ன- அணித்தலைவர், அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமல், லகிரு திரிமன்ன, குசால் மென்டிஸ், குசால் பெரேரா, நிரோசன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ பெரேரா, உசாடா பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க, செகான் ஜெயசூர்ய, சம்மிக கருணாரத்ன, டில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, லசித் எம்புல்டெனிய, லக்ஸன் சண்டகன், சுரங்க லக்மல், லகிரு குமார, விஸ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித மற்றும் அசித பெர்னாண்டோ.