தங்கத்தின் விலை தினம் தினம் ஏற்றம்

0
17

நாட்டில் தங்கத்தின் விலை வரலாற்று காணதாக ஏற்றம் கண்டுள்ளது. 24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று 70 ஆயிரத்து 800 ரூபாவாக இன்று (ஓகஸ்ட் 9) எட்டியுள்ளது என்று தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இலங்கையிலும் அதன் விலை கடந்த 10 தினங்களாக உயர்வடைந்து செல்கின்றது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 7) புதன்கிழமை 70 ஆயிரம் ரூபாவாக இருந்த தூய தங்கத்தின் விலை இன்று 70 ஆயிரத்து 800 ரூபாவாக அதிகரித்தது.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 64 ஆயிரத்து 900 ரூபாவாகக் காணப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையில் அதன் விலை வரும் நாள்களில் மேலும் அதிகரித்துச் செல்லும் என்று தங்கம் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.