ஓல்ட் கோல்ட்ஸ் அபார வெற்றி

0
19
கோப்புப் படம் – ஓல்ட் கோல்ட்ஸ் அணி

ஏபி பவுண்டேசன் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில் இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் ஓல்ட் கோல்ட்ஸ் அணியை எதிர்த்து விக்டோரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விக்டோரி அணி 15.3 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பத்மபிரியன் 32 ஓட்டங்களையும, திரேசன் 24 ஓட்டங்களையும், டானியல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் திலீபன் 3 இலக்குகளையும், சிந்துயன், பத்மபிரியன் இருவரும் தலா 2 இலக்குகளையும் பெற்றனர்.

93 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குக் களமிறங்கிய ஓல்ட் கோல்ட்ஸ் அணியினர் ஓர் இலக்கை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றனர். மதுசன் 47 ஓட்டங்களையும், மாதவன் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.