செஞ்சோலை மாணவிகள் படுகொலை; யாழ். பல்கலையில் நினைவேந்தல்

0

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.