ஆயிரக் கணக்கான அடியவர்கள் சூழ நல்லூரான் மஞ்சத்தில் பவனி

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் 10ஆம் நாளான இன்று மாலை மஞ்சத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வள்ளி, தெய்வாணை சமேதராய் முத்துக்குமார சுவாமி மாலை 5.30 மணிக்கு மஞ்சத்தில் ஆரோகணித்தார்.

வழமை போன்று கற்பூர பந்தங்கள் அலங்கரிக்க, ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ முத்துக்குமார சுவாமி மஞ்சத்தில் வீதியுலா வந்தார்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்