பிரதமர் ரணில் நல்லூர் கந்தனிடம் வழிபாடு

0

வடக்குக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று ( ஓகஸ்ட் 15) 10ஆம் திருவிழா இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் ஆலயத்துக்கு இன்று காலை வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முன்னதாக நல்லூர் ஆதீன கர்த்தாக்களுடனும் சந்திப்பினை மேற்கொண்டார். பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு பூசை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

பிரதமருடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.