மயிலிட்டித் துறைமுகம் சீரமைப்பின் பின் மக்களிடம் கையளிப்பு

மிக நீண்டகாலத்தின் பின் சீரமைப்பு செய்யப்பட்ட மயிலிட்டி துறைமுகம் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

சுமார் 30 வருடங்கள் உயர் துகாப்பு வலயத்தி ற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலட்டி துறைமுகம் கடந்த ஆண்டு விடுவிக்கப்படாது.

இந்நிலையில், சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலி ட்டி துறைமுகத்தின் சீரமைப்பு பணிகள் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த சீரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திறந்து வைத்த பிரதமர், துறைமுக சீரமைப்பு நினைவு கல்லினையும் திரைநீக்கம் செய்தார்.

இத்திட்டத்தின் முழு மொத்த முதலீடு 395 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!