மாகாண சபைத் தேர்தலை நடத்தும் சாத்தியம் உண்டா? – ஆராய நீதியரசர்கள் அமர்வு நியமனம்

2017ஆம் ஆண்டில் மாகாண சபை (திருத்த) சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் பின்பற்றப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறைக்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய நிலைமை உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஆராய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஐவர் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜெயசூர்ய இந்த நீதியரசர்கள் அமர்வை நியமித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரிய தலைமையில் நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட அமர்வே நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வு முன்னிலையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு ஓகஸ்ட் 23ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டடுள்ள இந்த விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்குமாறு அதன் தலைவருக்கு உயர் நீதி மன்றத்தின் பதிவாளர் இன்று அறிவித்தல் அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்ப்பட்ட மனு விசாரணை ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி இடம்பொறும் என்றும் அன்றைய தினம் சட்டத்தரணிகள் வாய்மூலம் சமர்ப்பணங்களை முன்வைக்க முடியும் என்று உயர் நீதிமன்றப் பாதிவாளர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரிடம் கேட்டுககொண்டுள்ளார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!