5 லட்சம் பக்தர்களுடன் சிறப்புற இடம்பெற்றது மடு மாதாவின் ஆவணித் திருவிழா

0

பிரசித்திபெற்ற மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதிவணக்கத்திற்குரிய வின்சன் பெனாண்டோ ஆண்டகையின் பங்கேற்புடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, குருநாகல் மறைமாவட்ட ஆயர் பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவனியும், ஆசிரும் பெற்றது. இதன் போது நூற்றுக்கணக்கான குருக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு,நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.