இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

73ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

0

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

பாரதத்தின் 73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தி வருகிறார்.
1998 முதல் 2003 வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து 6ஆவது முறை சுதந்திர தின உரையாற்றினார். இப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் சுதந்திர தின உரை நிகழ்த்துவது இது 6-ஆவது முறையாகும்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here