ஒன்றிணைகின்றன இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்கள்

இலங்கையின் முக்கியமான இரண்டு பௌத்த பீடங்களான, ராமன்ய நிக்காயவும், அமரபுர நிக்காயவும், இன்று இணைந்து கொள்ளவுள்ளன.

இதற்கான உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அமரபுர மாகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் அக்கமக பண்டித கொட்டுகொட தம்மவாச தேரரும், ராமன்ய நிக்காயவின், மகாநாயக்க தேரர் அக்கமக பண்டித நபனே பிறேமசிறி தேரரும் இந்த உடன்பாட்டின் கையெழுத்திடவுள்ளனர்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தைச் சேர்ந்த 450 பௌத்த பிக்குகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இரண்டு நிக்காயாக்களும் இணைந்து கொண்ட பின்னர், இலங்கை அமரபுர ராமன்ய சாம கிரி மகா சங்க சபா என்ற பெயரில் இயங்கவுள்ளன.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!