தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

0

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது.

24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று 71 ஆயிரத்து 400 ரூபாவை இன்று (ஓகஸ்ட் 16) வெள்ளிக்கிழமை எட்டியுள்ளது என்று தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது. அமெரிக்கா தனது டொலரின் பெறுமதியை உயர்த்துவதாலும் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைகிறது.

உலக சந்தையில் தங்கம் அவுன்ஸின் விலை 1,526 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று (ஓகஸ்ட் 15) வியாழக்கிழமை 71 ஆயிரத்து 400 ரூபாவாக இருந்த தூய தங்கத்தின் விலை இன்று 200 ரூபாவால் அதிகரித்தது.

நாட்டில் இன்று (ஓகஸ்ட் 16) வெள்ளிக்கிழமை 24 கரட் பிஸ்கட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 71 ஆயிரத்து 400 ரூபாவாவும் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 65 ஆயிரத்து 450 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையில் அதன் விலை வரும் நாள்களில் மேலும் அதிகரித்துச் செல்லும் என்று தங்கம் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.