இறமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதி

0

தாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி என்பனவற்றை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றை ஆட்சி என்பனவற்றை பாதுகாப்பதற்காக இராணுவத்திற்கு தலைமைத்துவம் அளிப்பதை தமது பிரதான பணியாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

குடிமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது, சுதந்திரமான ஜனநாயகத்துடன் கூடிய சூழலை உருவாக்குவது என்பன பிரதான பொறுப்புக்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியிலான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் செயற்படுவது அவசியமாகும்.

அனைத்து இனத்தவர்களையும் ஒரு தாய் மக்களாகக் கருதி, சகவாழ்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் என்பனவற்றுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது எனது இரண்டாவது பணியாகும்.

அனைவரது நலனுக்காக செயற்பட்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக தேவைகளை நிறைவு செய்வது எனது மூன்றாவது இலக்காகும் -என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here