2018 ஓஎல் சீராய்வு பெறுபேறுகள் வெளியீடு

2018ஆம் ஆண்டு டிசெம்பர் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியிடபட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. எனினும் பெறுபேற்றில் ஆட்சேபனை தெரிவித்து சீராய்வு விண்ணப்பம் செய்த மாணவர்களுடைய பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

“97 ஆயிரத்து 985 மாணவர்கள் சீராய்வு விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடைத்தாள்கள் மீள் திருத்தத்துக்கு உள்படுத்தப்பட்டன.

அதனடிப்படையில் பெறுபேறுகள் சீர்செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

சீராய்வு விண்ணப்பதாரிகள் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேற்றைப் பார்வையிட முடியும்.
மேலதிக தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்கள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும்” என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள தொலைபேசி இலக்கங்கள் :
011 2784 208
011 2784 537
011 3188 350
011 3140 314
1911 (Hotline)

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!