அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு

0
10

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2019 ஓகஸ்ட் 22ஆம் திகதின் ஓய்வுபெறவிருந்தார்.

இந்தநிலையில், அவருக்கு 2019 டிசெம்பர் 31ஆம் திகதிவரை சேவை நீடிப்பு அளிக்கும் உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக 2017இல் பொறுப்பேற்க முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி இருந்து கடற்படைத் தளபதியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பணியாற்றியிருந்தார்.