எழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்

0
18

எழுக தமிழ் 2019, பரப்புரை பணிகள் இன்று வெள்ளிக்கிழமை  முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி  அடுத்தமாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த எழுச்சிப் பேரணிக்கு தாயக மக்களை அணிதிரட்டும் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.

நல்லூர் கந்தன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண முன்னாள்  முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.