நல்லூரானின் கார்த்திகைத் திருவிழா சிறப்பு

0
19

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழ நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கார்த்திகைத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது.

நல்லூர் ஆலய வருடாந்தத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 18ஆம் நாளான இன்று முருகப் பெருமானுடைய அவதார நட்சத்திரமான கார்த்திகை நாளில் பகல் திருவிழா நல்லூரான் செவ்வந்திப் பூ அலங்காரத்துடன் அடியவர்களுக்கு காட்சியளித்தார்.

மாலை சிறப்புத் திருவிழாவாக வள்ளி, தெய்வாணை சமேதராய் முத்துக்குமார சுவாமி வெளிவீதியுலா வந்து காட்சியளித்தார்.

இதேவேளை, 19ஆம் திருவிழாவான நாளை காலை 6.30 மணிக்கு சூரிய உற்சவம் இடம்பெறுகிறது.
படங்கள்- ஐ.சிவசாந்தன்.