பொது அமைதியைப் பேண முப்படையினருக்கும் அதிகாரம் – அவசரகால நிலையின் ஒரு பிரிவை நடைமுறைப்படுத்தினார் ஜனாதிபதி

0
15

நாட்டின் பொது அமைதியைப் பேணி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முப்படையினருக்கு அதிகாரமளிக்கும் பிரகடனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தியுள்ளார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்று (ஓகஸ்ட் 22) வியாழக்கிழமையுடன் காலாவதியான நிலையில் இந்தப் பிரகடனத்தை ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40ஆவது அத்தியாயத்தின் 12ஆம் பிரிவின் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பொது அமைதியைப் பேணுவதற்காக முப்படையினருக்கு இதன்மூலம் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் பொலிஸாருக்கு உள்ள சோதனையிடுதல், கைது செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.