மருத்துவர் சிவரூபனுடன் தொடர்பு வைத்திருந்ததாக மூவர் கைது

0
20


பளை வைத்தியத்தியசாலை மருத்துவ அதிகாரியுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் பளை வைத்தியசாலை மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவனர் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவருடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூவரை நேற்றைய தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.