மாகாணசபைத் தேர்தல்; உயர் நீதிமன்றின் விசாரணை நிறைவு – வியாக்கியானம் விரைவில் ஜனாதிபதிக்கு

0

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்வைத்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்தது. மனு மீதான தனது வியாக்கியானம் ஜனாதிபதிக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.

2017 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்த, விகிதாசார பிரதிநிதித்துவ முறையில், மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியுமா என்று, அறிவிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்றிடம் கோரியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த மனுத் தொடர்பாக இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு கூடியது. அதன்போது சட்ட மா அதிபர் உள்பட சட்டவாளர்கள் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அவற்றை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், தனது வியாக்கியானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதாக அறிவித்தது.
ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து, உயர் நீதிமன்றம் தனது கருத்தை ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here