30 அலகு மின் பாவனையாளர்களுக்கு மின்குமிழ்கள்

0
9

மாதாந்தம் 30 அலகுகளுக்கு உள்பட்டு மின் பாவனையைக் கொண்ட குடும்பங்களுக்கு இலங்கை மின்சார சபையினால் மிகக்குறைந்த வோல்ட்  மின்குமிழ்கள் வழங்கப்பட்டன.

அதனை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணம்  பிரதம அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில்  மாதாந்தம் 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தலா 2 மின்குமிழ்கள் வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத்  திட்டமானது நாடுமுழுவதும் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்  மின்குமிழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட  பகுதியில் 2 ஆயிரத்து 338 குடும்பங்கள் 30 அலகுகளுக்கு உள்பட்டு  மாதாந்தம் மின்சாரத்தை பயன்படுத்துவதாக யாழ்ப்பாணம் மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் தெரிவித்தார்.