தங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்

0

நாட்டில் தூய தங்கத்தின் விலை இன்று (ஓகஸ்ட் 24) சனிக்கிழமை ஒரே நாளில் ஆயிரத்து 200 ரூபாவால் அதிகரித்தது என்று தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் 400 ரூவால் அதிகரிப்பதும் குறைவடைவதுமாகக் காணப்பட்ட தங்கத்தின் விலை திடீரென இன்று ஆயிரத்து 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

24 கரட் தூய தங்கத்தின் இன்றைய விலை 73 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் தங்கத்தின் ஆகக் கூடிய விலையாகும்.

22 கரட் தங்கத்தின் விலை 66 ஆயிரத்து 900 ரூபாவாகவும் 21 கரட் தங்கத்தின் விலை 63 ஆயிரத்து 900 ரூபாவாகவும் காணப்படுவதாக யாழ்ப்பாணத்தில் தங்க வியாபாரத்தில் முன்னிலை வகிக்கும் சிறிநதியா நகை மாளிகை முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் கேள்வி அதிகரிப்பால் ஏற்பட்ட தொடர் விலை ஏற்றமே இலங்கையில் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு காரணியாக அமைகின்றது என்று தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.