இன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை

0

நாட்டில் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 600 ரூபாவால் உயர்வடைந்து 73 ஆயிரத்து 600 என்ற உச்சத்தைத் தொட்டது.

இதன்படி ஆபரணத் தங்கமான 22 கரட் ஒரு பவுண் (8 கிராம்) 67 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 25 நாள்களில் தூய தங்கத்தின் விலை பவுணக்கு 6 ஆயிரத்து 400 ரூபா அதிகரித்துள்ளது. ரூபா மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.