பொலிஸ் திணைக்களத்தின் 153ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்வு

0

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 153 ஆவது தின நிகழ்வு யாழ்ப்பாணம் இன்று இடம்பெற்றது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 153வது நிறைவு நிகழ்வின் வடமாகாண நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கலந்து கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ் மாவட்ட அரச அதிபர் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய 153வது நிறைவு தின நிகழ்வில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிறப்புரையும் இடம்பெற்றது.