நல்லூரிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்துக்கு பாத யாத்திரை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாத யாத்திரை இன்று காலை ஆரம்பமானது.

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 9 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்று அங்கிருந்து திருகோணமலை சென்று மட்டக்களப்பு சென்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடாத்தப்படவுள்ளன.

நாட்டில் சமாதானம், நிரந்தர அமைதி, நல்லிணக்கம்மேம்பட இறையருள் வேண்டியயே இந்த பாதயாத்திரை இடம்பெறுகின்றது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!