யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர் நியமனம்; போராட்டத்தில் ஈடுபடுவோருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆள்சேர்ப்பில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து சுழற்சிமுறை உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழ் மக்கள் கூட்டணயின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்தித்தார்.

இந்தப் போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் ரவூக் ஹக்கீமுடன் கலந்துரையாடுவதாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது உறுதியளித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து கடந்த ஜூன் மாதம் வந்த பெயர்ப் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக  நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்த போதும் தங்களது பெயர்கள் வராது பாதிக்ப்பட்டோர் தங்களது  கோரிக்கைகளை உயர் கல்வி அமைச்சோ,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ, ஏற்று உரிய தீர்வகளை வழங்க முன்வராததோடு  தங்களது நியாமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தனர்.