டோனிக்கு ஓய்வில்லை

0

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களுக்கான இலக்குக் காப்பாளருமான டோனி ஓய்வுபெறவுள்ளார் என்று வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று தெரிவித்தார் தெரிவுக் குழுவின் தலைவரான பிரசாத்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இருந்து விலகிய டோனிக்கு நாளைமறுதினம் ஆரம்பமாகும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் டோனி ஓய்வு பெறவுள்ளார் என்று தகவல் வெளிவந்த நிலையில் அவற்றை தெரிவுக்குழுவின் தலைவரான பிரசாத் மறுத்துள்ளார்.