சிமித் மீண்டும் தலைவராவார்: ரெய்லர் நம்பிக்கை

0

ஆஸ்திரேலிய அணியை சிமித் மீண்டும் வழிநடத்துவார் என்று அந்த அணியின் முன்னாள் தலைவர் ரெய்லர் நம்பிக்கை தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய சிமித் ஓர் ஆண்டு தடைக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி வருகின்றார். நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரிலும் அவர் மிகச் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவர் மீண்டும் தலைவராவார் என்றுள்ளார் ரெய்லர்.
சிமித் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார். அடுத்த தடைவை தலைமைப் பொறுப்பில் அவர் மிகச் சிறப்பாக செயற்படுவார் என்று ரெய்லர் மேலும் குறிப்பிட்டார்.