44 ஆயிரம் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் இணைவதற்கு வாய்ப்பு

0

கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையால் 44 ஆயிரத்து 568 மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் இடைப்பட்ட தரங்களுக்கு இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் இடைத்தரங்களுக்கு உள்பட்ட மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக முறையாகவும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்காக வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறும் வெற்றிடங்களின் எண்ணிக்கையினை பகிரங்கப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்காக நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் தரம் 1,5,6, மற்றும் தரம் 11 தவிர்ந்த இடைப்பட்ட தரங்களில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் சேர்த்து கொள்ளப்படும் நடைமுறை 2019.07.03 திகதி அன்று தேசிய பத்திரிகை மூலமும் கல்லி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தத்தின் மூலமும் தமிழ், சிங்களம் மொழிகளில் வெளியிடப்பட்டது.

அத்தோடு இந்த வெற்றிடங்கள் நிலவும் எத்தகைய தேசிய பாடசாலைகளுக்கும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இதில் சிறப்புத் தன்மை என்னவெனில் பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளும் நடைமுறைக்கு அமைவாக விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் தமக்கு உரித்தான புள்ளி எண்ணிக்கைகளை அறிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்களை சேர்த்து கொள்ளும் பொழுது ஏற்படக்கூடிய முறைகேடுகள் தடுக்கப்படுவதுடன் உரிய தகுதியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் இணைந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இதற்க அமைவாக சிங்கள மொழி மூலம் 25 ஆயிரத்து 419 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 19,149 மாணவர்களும் நாடு முழுவதிலும் உள்ள தேசிய பாடசாலைகளில் இடைப்பட்ட தர வகுப்புக்களுக்கு உள்வாங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை பெரும்பாலான சவால்களுக்கு மத்தியில் பெறப்பட்ட வெற்றி ஆகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here