
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி உணவாக கிடையாது என புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மிஷ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வாளராக மிஷ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் உணவுமுறையில் கட்டுப்பாடு விதித்துள்ளார். இங்கிலாந்தில் உலக கோப்பை நடந்தபோது, பாகிஸ்தான் வீரர்களின் உடல்தகுதி குறித்து பிரச்சினை எழுந்தது. இதன் காரணமாகவே இந்த நடைமுறை வந்துள்ளது.