யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை பவுணுக்கு 500 ரூபாவால் இன்று குறைவடைந்துள்ளது. ஆபரண தங்கமான 22 கரட் பவுண் ஒன்று 66 ஆயிரத்து 450 ரூபாவாக விற்பனையாகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதனடிப்படையில் தூய தங்கமான 24 கரட் பிஸ்கட் பவுண் 72 ஆயிரத்து 500 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

செப்ரெம்பர் 5ஆம் திகதி தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 74 ஆயிரத்து 800 ரூபாவாகக் காணப்பட்டது. அது கடந்த 10 தினங்களில் ஏற்ற இறக்கமாகக் காணப்பட்டு இன்று 72 ஆயிரத்து 500 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

உலகளாவிய விலைகள் குறைந்தது, அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்வது, இலங்கையில் தங்கத்தின் விலை சரிவுக்கு காரணம் என்று தங்கம் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகளவில், தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் ஆயிரத்து 550 டாலர்களிலிருந்து 4% க்கும் குறைந்துள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஒக்டோபரில் அடுத்த சுற்று வர்த்தகப் பேச்சுக்கள் நடைபெற உள்ளன. அப்போது வணிக ரீதியிலான மோதலில் தீர்வுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை இலங்கையில் சரிவை சந்தித்துள்ளது என்று கூறப்படுகிறது.