யாழ் பல்கலையில் வடக்குக்கு முன்னுரிமை

0

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆட்சேர்ப்பில் வடக்கு மாகாணத்துக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் ஹக்கீம்.

400 பேர் கொண்ட தகவல்களைக் குறித்து வெளிவரும் கருத்துக்களில் சிறு உண்மையும் இல்லை. வடமேல் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்து சிலர் உள்வாங்கப்பட்டிருந்தாலும் வடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களை அந்தப் பட்டியலில் சேர்க்குமாறு தெரிவித்து செயலாளர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்திருக்கின்றார் என்பதுதான் உண்மை. அதற்கப்பால் எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மற்றும்படி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வடக்கு மாகாணவர்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் நானும் உறுதியாக உள்ளேன். அதை ஏற்றுக்கொள்கின்றேன் – என்று ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.