சுத்தமான யாழ். நகரத்தில் கழிவகற்றலில் அசமந்தம்

0

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வடிகாண் கழிவுப் பொருள்களால் நிறைந்து அடைத்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

சுத்தமான யாழ்.மாநகரம் என்ற தேர்தல் கொள்ளை வெளியீட்டுடன் ஆட்சிக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரில் பல்வேறு பகுதிகளில் வடிகாண்கள் அடைந்து கழிவு நீர் தேங்கி நிற்கின்றன.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி, கஸ்தூரி வீதிச் சந்திக்கு அண்மையாக வடிகாண் குப்பைகளால் நிரவி கழிவு நீர் ஓட முடியாது அடைத்துள்ளது. அதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.

இதுதொடர்பில் அந்தப் பகுதியில் உள்ள வர்த்தகர்களால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட போதும் கடந்த ஒரு வாரமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.