யாழ். பல்கலையில் உயிர்கொடை அளித்தவர் நினைவாய் குருதிக்கொடை

0

தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தலில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் குருதிக் கொடை வழங்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தலில் இறுதி நாள் நிகழ்புகள் இன்று தாயகம் எங்கும் புலம்பெயர் நாடுகளிலும் நடைபெற்று வருகின்ற சூழலில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் “உயிர்கொடை அளித்தவர் நினைவாய் அளித்திடுவோம் குருதிக்கொடை” என்ற வாசகத்துடன் குருத்திக் கொடை முகாம் நடைபெற்றது.

அதிகளவான மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர். அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் வீரச்சாவை தழுவிய நேரத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன், தியாக தீபம் திலீபனின் நினைவுகள் விருட்சமாக வேண்டும் எனும் எண்ணத்தில் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.