மன்னாரில் சைவ மாநாடு

0

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று இந்த மாநாடு நடைபெற்றது.

‘தமிழ் எங்கள் மொழி, சைவம் எங்கள் வழி’ என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது. மாநாட்டுக்கு முன்னதாக கலாசார ஊர்வலம் இடம்பெற்றது. முல்லைத்தீவு – நீராவிடியப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்றத்தை அவமதித்து பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ஊர்வலத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சின்மியா மிஷன் சுவாமிகள், தென் கைலை ஆதீன சுவாமிகள், தமிழருவி த.சிவகுமாரன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், செந்தமிழ்ச் சொல்லருவி லலீசன் உள்ளிட்ட சைவப் பெருமக்கள், கல்விமான்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here