இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

முடிவை மறுபரிசீலனை செய்கிறதாம் ஐ.நா – இராணுவத் தளபதி கூறுகிறார்

0

ஐ.நா அமைதிப்படையில் இருந்து இலங்கை படையினரை வெளியேற்றும் முடிவு தொடர்பாக, ஐ.நா மறுபரிசீலனை செய்து வருவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி – தலதா மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் படையினர் பங்கேற்பது குறித்த முடிவை ஐ.நா மறுபரிசீலனை செய்து வருகிறது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இதுதொடர்பாக, இன்னமும், ஐ.நா  அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.

வேலைநிறுத்தப் போராட்டங்களினால் சீர்குலைந்துள்ள அவசர சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு அரசால் உதவி கோரப்பட்டால், எந்த நேரத்திலும் ஒத்துழைக்க இராணுவம் தயாராக இருக்கிறது.

இராணுவம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது, இது தொடர்பாக ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here