யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு

0

யாழ்ப்பாணத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுணுக்கு 900 ரூபாவால் இன்று குறைவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.

கடந்த மாதம் 5ஆம் திகதி வரலாற்றிலேயே முதல் முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 74 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனையானது.

எனினும் செப்ரெம்பர் நடுப்பகுதி முதல் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நேற்று 22 கரட் தங்கம் பவுணுக்கு 66 ஆயிரம் ரூபாவாக விற்கப்பட்டது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுணுக்கு 900 ரூபாவால் சரிந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி, யாழ்ப்பாணத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை 71 ஆயிரம் ரூபாவாகவும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 65 ஆயிரத்து 100 ரூபாவாகவும் குறைந்துள்ளது.