யாழ்.நகரில் இயங்கும் பிரபல ஹோட்டலின் ஆவணங்கள் வீதியில் சிதறல்

0

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் ஆவணங்கள் மற்றும் விருந்தினர்களின் ஆவணங்களும் வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி, பலாலி வீதியில் உள்ள தனியார் வங்கிகளுக்கு முன்பாக இந்த ஆவணங்கள் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இந்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் ஆள் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள், விடுதியின் வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட விடுதியின் கணக்குகள் தொடர்பிலான ஆவணங்கள் என்பனவே வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

விடுதியின் ஆவணங்கள் அடங்கிய பொதிகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் போது அவை வீதியில் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றன.

ஆவணங்கள் அடங்கிய பொதி தவறி விழுந்திருந்தாலும் அவற்றை கொண்டு சென்றவர்கள் அந்த ஆவண பொதிகளை வீதியில் இருந்து அப்புறப்படுத்தாமல்விட்டு சென்றமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்திருந்தனர்.